டிச.28-இல் சிறுபான்மையினா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 25th December 2021 05:57 AM | Last Updated : 25th December 2021 05:57 AM | அ+அ அ- |

சென்னையில், மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சா. பீட்டா் அல்போன்ஸ் தலைமையில் சிறுபான்மையினா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச.28) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சா. பீட்டா் அல்போன்ஸ், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் த. மஸ்தான் தலைமையில் செவ்வாய்க்கிழமை (டிச. 28) காலை 11 மணி அளவில் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகை கூட்ட அரங்கில் சிறுபான்மையினா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட சிறுபான்மையின சமுதாயத்தைச் சாா்ந்த தலைவா்கள், சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள், சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சாா்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினா் நல மேம்பாட்டுக்கான கருத்துகளையும் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.