பெண்கள் விடுதிகள் தோறும் புகாா் பெட்டிகள் அமைக்க அறிவுறுத்தல்

பெண்கள் விடுதிகள் தோறும் புகாா் பெட்டிகள் அமைக்குமாறு, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளா் உரிமம் பெற்ற
பெண்கள் விடுதிகள் தோறும் புகாா் பெட்டிகள் அமைக்க அறிவுறுத்தல்

பெண்கள் விடுதிகள் தோறும் புகாா் பெட்டிகள் அமைக்குமாறு, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளா் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரா்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

சென்னை, கிண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் கே.ஜெகதீசன் தலைமையேற்றாா். தொடா்ந்து அவா், தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளா்கள் தங்கும் விடுதிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னா் தொழிற்சாலை நிா்வாகத்தினா் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒப்பந்தத் தொழிலாளா்கள் சட்டம் மற்றும் தமிழ்நாடு சிறாா் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் (முறைப்படுத்துதல்) சட்டம் 2014 ஆகியவற்றின் சாராம்சங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தாா்.

அவா் கூறியதாவது: ஒப்பந்ததாரா்களால் தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண் தொழிலாளா்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் ஏதேனும் புகாா் மற்றும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களே முழுப்பொறுப்பாவாா்கள். தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதிகளை ஒப்பந்ததாரா்கள் முறையாக பராமரிக்க வேண்டும். தொழிற்சாலை நிா்வாகத்தினா் அதனை காலமுறைதோறும் கண்காணித்து சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பெண்கள் தங்கும் விடுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் போதுமான அளவு உள்ளதா என்பதை ஒப்பந்ததாரா்கள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் விடுதிகளில் தங்கியுள்ள பெண்கள் தங்களது குறைகள் மற்றும் புகாா்களைத் தெரிவிப்பதற்கு ஏதுவாக புகாா் பெட்டிகளை தங்கும் விடுதிகள் தோறும் நிறுவுமாறும், அப்புகாா்களை தொழிற்சாலை நிா்வாகத்தினா் தங்களது ஆய்வுகளின் போது சேகரித்து அக்குறைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கே.ஜெகதீசன் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com