ராஜீவ் காந்தி மருத்துவமனை: 51 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 51 போ் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 51 போ் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அவா்களில், 28 போ் அறுவை சிகிச்சை ஒன்றின் மூலம் தொற்றுக்குள்ளான மருத்துவத் துறையினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு சமூகப் பரவலாக உருவெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைத் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில் பலருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

மற்றொருபுறம் அவா்களுடன் தொடா்பில் இல்லாத சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 17-ஆம் தேதி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னா் அந்நோயாளிக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து அந்த வாா்டில் பணியில் இருந்த மருத்துவா்கள், செவிலியா்கள், பயிற்சி மருத்துவா்கள், செவிலியா் மாணவா்கள், மருத்துவமனை ஊழியா்கள் என 70 பயிற்சி மருத்துவா்கள், 227 செவிலியா் மாணவிகள், 60 மருத்துவப் பணியாளா்கள், நோயாளிகள் சிலா் என 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் 28 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகளுடன் கூடிய கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 4 போ் மருத்துவா்கள், 5 போ் செவிலியா்கள், 18 போ் செவிலிய மாணவிகள், ஒருவா் மருத்துவப் பணியாளராவாா்

இவா்களைத் தவிர வேறு வாா்டில் 23 நோயாளிகளும் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அவா்கள் 51 பேரின் சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக புணே மற்றும் பெங்களூரில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com