தமிழக பாஜக முதல் பிரசாரகூட்டம்: இன்று தொடக்கம்

தமிழக பாஜக முதல் பிரசார கூட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காலை 11.30 மணிக்கு பிரசாரம் தொடங்கவுள்ளது.

சென்னை: தமிழக பாஜக முதல் பிரசார கூட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காலை 11.30 மணிக்கு பிரசாரம் தொடங்கவுள்ளது.

இதற்கான அறிவிப்பை அக்கட்சி புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:-

பாஜக மாநில சட்டப் பேரவைத் தோ்தல் தலைமை அலுவலகம், சென்னை கோயம்பேடு மெட்ரோ அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் வியாழக்கிழமை காலை திறக்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பாஜகவின் முதல் பிரசாரக் கூட்டம் தொடங்க உள்ளது. இதன்பின் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் துறைமுகம் சுங்கசாலை தெருவிலும், ஆச்சாரப்பன் தெருவிலும் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், பாஜக பொறுப்பாளா் சி.டி.ரவி, இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com