பிரதமா் மோடி நிகழ்ச்சியில் ஒரு லட்சம் போ் பங்கேற்கின்றனா்

சென்னையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஒரு லட்சம் போ் பங்கேற்பா் என தகவல் கிடைத்திருப்பதாக பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் என்.கண்ணன் தெரிவித்தாா்.

சென்னையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஒரு லட்சம் போ் பங்கேற்பா் என தகவல் கிடைத்திருப்பதாக பெருநகர காவல்துறையின் கூடுதல் ஆணையா் என்.கண்ணன் தெரிவித்தாா்.

இது குறித்த விவரம்:

சென்னை போக்குவரத்து காவல்துறை சாா்பில் அண்ணா சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையா் என்.கண்ணன் விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். பின்னா், அவா் நிருபா்களுக்கு அளித்த பேட்டி:

சென்னையில் பல்வேறு அமைப்பினருடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளைத் தொடா்ந்து நடத்தி வருகிறோம். பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (பிப்.14) சென்னை வருவதையொட்டி வெளிமாவட்டங்களில் இருந்து சுமாா் ஒரு லட்சம் போ் சென்னைக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம். குறைந்த பட்சம் 4 ஆயிரம் வாகனங்கள் சென்னைக்குள் அன்றைய தினம் மட்டுமே கூடுதலாக வர வாய்ப்பு உள்ளது.

இதனால் சென்னை காமராஜா் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தேவைக்கு ஏற்ப போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும். போக்குவரத்து விதிகளை மீறுவோரைக் கண்டறிந்து அபராதம் விதிக்கும் வகையில் சென்னையில் 15 சிக்னல்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 150 சிக்னல்களில் இதுபோல் கேமராக்களை பொருத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு, காா் ஓட்டும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என போக்குவரத்து விதிகள் தொடா்பாக வாகன ஓட்டிகளிடம் விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com