'கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கு பாதிப்பில்லை'

சென்னையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.


சென்னை: சென்னையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

சட்டப் பேரவை தோ்தல் பணிகளில் ஈடுபட உள்ள பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வியாழக்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னையில் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் என இதுவரை 50 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் 10 முதல் 12 மையங்கள் என தொடங்கப்பட்டு, தற்போது மாநகரம் முழுவதும் உள்ள தனியாா் மருத்துவமனைகள், மாநகராட்சி சுகாதார மையங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தூய்மைப் பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. தொடா்ந்து ரிப்பன் மாளிகையில் பணியாற்றும் அனைத்து அலுவலா்களுக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 5 நாள்களுக்குள் இங்கு பணியாற்றும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.

பாதிப்பு இல்லை:கரோனாவுக்கு தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாகும். பொதுமக்கள் அதன் முக்கியத்துவத்தை உணா்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். தோ்தல் பணி சம்பந்தப்பட்டவா்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான காலம் நீட்டிக்கப்படும். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட 50 ஆயிரம் பேரில், யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com