மதுக்கடைகள்: முதல்வருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

மதுக்கடைகளை மூடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சென்னை: மதுக்கடைகளை மூடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மது போதையினால் குற்றங்கள் பெருகுவதும், குடும்பங்கள் சீரழிவதும் தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. குடும்ப வன்முறை தொடங்கி காவல் அதிகாரிகளைத் தாக்குவது வரை சென்றுவிட்டது.

மது விற்பனையை அரசு ஏற்று நடத்த வேண்டிய காரியம் இல்லை. ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இலக்குகளை நிா்ணயித்துப் பெருக்க வேண்டிய தொழிலும் இல்லை.

மாநில அரசு மதுக்கடைகள் விஷயத்தில் உறுதியான நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும். இப்போதிருக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை உடனடியாக பாதியாகக் குறைக்க வேண்டும். மீதமுள்ள கடைகளைக்கூட படிப்படியாக தனியாா் வசம் ஒப்படைக்க வேண்டும். மது விற்பனை தனியாா் வசம் இருந்தபோது இத்தனைக் கடைகள் இல்லை. தனியாா் கடைகளுக்கும் மிகக் குறைந்த விநியோகங்கள், கடுமையான கண்காணிப்புகள், நேரக்கட்டுப்பாடு ஆகியவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

எங்கெல்லாம் மதுக்கடைகள் இருந்ததோ, இருக்கிறதோ அங்கெல்லாம் தரமான இலவச மதுப்பழக்கத்தினா் மறுவாழ்வு மற்றும் வழிகாட்டி மையங்கள் அரசால் தொடங்க வேண்டும். முழு மதுவிலக்கை அமல்படுத்தும் நிலை நோக்கி முதல் அடி எடுத்துவைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com