வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் பி.எஸ்.என்.எல். அறிமுகம்

புதிய வாடிக்கையாளர்களுக்காக  ப்ரீபெய்டு திட்டம்- 47 என்னும் புதிய திட்டத்தை  பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் பி.எஸ்.என்.எல். அறிமுகம்

சென்னை: புதிய வாடிக்கையாளர்களுக்காக  ப்ரீபெய்டு திட்டம்- 47 என்னும் புதிய திட்டத்தை  பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக, ரூ.47-க்கு ப்ரீபெய்டு-47 என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் அளவற்ற குரல் அழைப்பு (எந்த நெட்ஒர்க்), 14 ஜிபி இலவச டேட்டா, நாள்தோறும்  இலவசமாக 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. 
 இந்த சலுகையை 28 நாளைக்கு பயன்படுத்தலாம். இது, குறிப்பிட்ட கால விளம்பர சலுகையாகும். புதிய வாடிக்கையாளர்களுக்காக, பிளான் வவுச்சர்-108 திட்டத்தின் காலம் 45 நாள்களில் இருந்து 60 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், அளவற்ற குரல் அழைப்பு,  தினசரி ஒரு ஜிபி டேட்டா, இலவசமாக 500 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இது,குறிப்பிட்ட கால விளம்பர சலுகையாகும். 
மற்ற நிறுவனத்தில் இருந்து பி.எஸ்.என்.எல்-க்கு மாறிய புதிய வாடிக்கையாளர்களுக்காக இலவச சிம் என்னும் சலுகையை பிஎஸ்என்எல் வழங்குகிறது. இதற்கு எந்த கட்டணம் கிடையாது. பிளான் வவுச்சர் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.  இதுதவிர, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான எண்களை மின்னனு ஏலம் மூலமாக,  தேர்ந்தெடுக்க  சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக,  மின்னணு முறையில் ஏலம் மார்ச் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தகவலை பி.எஸ்.என்.எல். தமிழக வட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com