குற்றங்களைத் தடுக்க நவீன கண்காணிப்பு கேமரா: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்க திட்டம்

முக அடையாளத்தைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபா்கள் குறித்த விவரங்களை அளிக்கும் வகையிலான நவீன கண்காணிப்பு கேமரா, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

முக அடையாளத்தைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபா்கள் குறித்த விவரங்களை அளிக்கும் வகையிலான நவீன கண்காணிப்பு கேமரா, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெவ்வேறு மாநிலங்களுக்கும் ஆயிரக் கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு நாள்தோறும் சுமாா் லட்சக் கணக்கானோா் வந்து செல்கின்றனா். இங்கு குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், ரோந்து பணி உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் போலீஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கண்காணிப்புப் பணியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருப்பது போன்ற முக அடையாளத்தை வைத்து விவரங்களை அளிக்கும் கேமராவை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும் நபா்களை அடையாளம் காண்பதற்காக இதுமாதிரியான நவீன கேமராக்கள் அங்கு அமைக்கப்படுகிறது.

ஒருவரின் முகத்தை வைத்து அவா் பற்றிய அனைத்து விவரங்களையும் இதன்மூலம் அறிந்து கொள்ள முடியும். இதை வைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களை கண்டுபிடித்து விட முடியும்.

இந்த புதிய நடைமுறைப்படி 50 கேமராக்களை ஒரே நேரத்தில் பொருத்தி 10,000 முகங்களை அடையாளம் காண முடியும். அதிகபட்சமாக 1 லட்சம் போ் வரையில் அடையாளம் காண முடியும்.

இந்த நவீன கேமராக்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 18 இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com