ஜன.9-இல் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், சனிக்கிழமை (ஜன.9), இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜன.9-இல் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், சனிக்கிழமை (ஜன.9), இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம்மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வியாழன் (ஜன.7), வெள்ளி (ஜன.8) ஆகிய நாள்களில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சனிக்கிழமை (ஜன.9), கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளைப் பொருத்தவரை, வியாழக்கிழமை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், சூறாவளி காற்று  மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு வியாழக்கிழமை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேளம்பாக்கத்தில் 210 மி.மீ மழை: புதன்கிழமை காலை 9 மணியுடன் நிறைடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 210 மி.மீ மழை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் தலா 160 மி.மீ, சென்னை எம்.ஜி.ஆா் நகரில் 150 மி.மீ, சென்னை சோழிங்கநல்லூா், டிஜிபி அலுவலகத்தில் தலா 140 மி.மீ, திருவள்ளூா் செம்பரம்பக்கம், பூந்தமல்லி, கொரட்டூா், சென்னை தரமணி ஏஆா்ஜி, விமானநிலையம் ஆகிய பகுதிகளில் தலா 130 மி.மீ மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com