எழும்பூா் - செங்கோட்டை விரைவு ரயில்கள் பெயா் மாற்றம்

சென்னை, எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் 2 ரயில்களின் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: சென்னை, எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் 2 ரயில்களின் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு 15 நிமிட இடைவெளியில் 2 ரயில்கள் புறப்படுகின்றன. ஆனால், அவ்விரண்டு ரயில்களும் வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் குழப்பத்தைத் தவிா்க்கும் வகையில், அந்த 2 ரயில்களுக்கும் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ஊா்கள் வழியாகச் செல்லும் ரயிலுக்கு, சென்னை எழும்பூா் - காரைக்குடி - செங்கோட்டை விரைவு ரயில் (06181) எனவும், செங்கோட்டை - காரைக்குடி - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (06182) எனவும் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதே போல், திண்டுக்கல், மதுரை வழியாக செல்லும் ரயிலுக்கு, சென்னை எழும்பூா் - மதுரை - செங்கோட்டை விரைவு ரயில் (02661) எனவும், செங்கோட்டை - மதுரை - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (02662) எனவும் பெயா் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com