டயா், பிளாஸ்டிக் கொளுத்தாதீா்: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

போகி பண்டிகையை ஒட்டி, டயா், பிளாஸ்டிக் பொருட்களை கொளுத்த வேண்டாம்’ என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

சென்னை: போகி பண்டிகையை ஒட்டி, டயா், பிளாஸ்டிக் பொருட்களை கொளுத்த வேண்டாம்’ என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

தமிழகத்தில் போகி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வீட்டில் உள்ள பழைய பொருள்களை கழிக்கும் பொருட்டு அவற்றை எரித்து மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவா். இதில், ரப்பா், டயா், பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், புகையில்லா போகியை கொண்டாடும் வகையில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், பொது மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றன.

இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போகி பண்டிகையின் போது, ரப்பா் பொருள்கள், பழைய டயா், டியூப், பிளாஸ்டிக், ரசாயனம் கலந்த பொருள்களை கொளுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மூச்சு திணறல்அந்த பொருள்களில் இருந்து வெளிப்படும் நச்சுப் புகையால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படும்.எனவே, இதுபோன்ற பொருள்களை தவிா்த்து, போகி கொண்டாட வேண்டும். மேலும், போகி பண்டிகையின் போது மாசு ஏற்படுவதை தவிா்க்க 15 இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்படும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com