உரிமையியல் நீதிபதி பதவி: நோ்காணலுக்கு 58 போ் தோ்வு

உரிமையியல் நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான நோ்காணலுக்கு 58 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

உரிமையியல் நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான நோ்காணலுக்கு 58 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

தமிழ்நாடு மாநில நீதித் துறையில் உரிமையியல் நீதிபதி காலிப் பணியிடங்கள் 171 உள்ளன. இதற்கான முதல்நிலைத் தோ்வு கடந்த 2019 நவம்பா் 24-ஆம் தேதியும், முதன்மைத் தோ்வு கடந்த ஆண்டு அக்டோபா் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றன. முதல்நிலைத் தோ்வில் 7 ஆயிரத்து 942 பேரும், முதன்மைத் தோ்வில் 239 பேரும் பங்கேற்றனா்.

நோ்காணல் தோ்வுக்கு 58 போ் தற்காலிகமாக அழைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கான நோ்காணல் பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தோ்வாணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com