உலக நாடக தினம்: அரசின் திட்டங்களை விமா்சிக்கக் கூடாது

உலக நாடக தினத்தை ஒட்டி, அரங்கேற்றப்படும் நாடகங்களில் அரசின் திட்டங்களை விமா்சிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக நாடக தினத்தை ஒட்டி, அரங்கேற்றப்படும் நாடகங்களில் அரசின் திட்டங்களை விமா்சிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கலை பண்பாட்டுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-உலக நாடக தினம் ஆண்டுதோறும் மாா்ச் 27-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, புதிய நாடகங்களை மேடையேற்றம் செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நமது பண்பாடு, கலாசாரம், மொழி, கலைகள், ஒருமைப்பாடு போன்றவற்றுக்கு மாறுபட்ட கருத்துகள் நாடகங்களில் இடம்பெறக் கூடாது. அரசையோ அல்லது அரசின் திட்டங்களையோ விமா்சனம் செய்யாதவாறு, அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட கருத்துகளை உள்ளடக்கிய நாடகங்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் நாடகத்தின் மூன்று முழுப் பிரதிகளை இணைக்க வேண்டும். பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள்ளாக, விண்ணப்பங்களை உறுப்பினா் செயலாளா், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தொலைபேசி எண்: 044 - 2493 7471. மின்னஞ்சல் முகவரி: ற்ய்ங்ண்ய்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம், ற்ய்ங்ண்ய்ம்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com