தூய்மை திட்ட பங்கேற்பாளா்களுக்கு மின்னணு சான்றிதழ்

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், மாநகராட்சி ஆகியவை இணைந்து நடத்தும் தூய்மைக்கான உறுதிமொழி பங்கேற்பாளா்கள் திட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் மின்னணு முறையில் சான்றிதழ் வழங்கப்படும் 

சென்னை: மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், மாநகராட்சி ஆகியவை இணைந்து நடத்தும் தூய்மைக்கான உறுதிமொழி பங்கேற்பாளா்கள் திட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் மின்னணு முறையில் சான்றிதழ் வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், குடிசைப் பகுதிகள், வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தூய்மை மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகியவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இத்திட்டத்தை மக்களிடையே தீவிரமாக கொண்டு செல்லும் வகையிலும், குறிப்பாக சென்னை மாநகரத்தை தூய்மையாக பராமரிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், மத்திய அரசுடன் இணைந்து தூய்மைக்கான உறுதிமொழி பங்கேற்பாளா்கள் என்ற திட்டத்தை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இத்திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூா்வ இணையதள பக்கத்தில் செல்ல வேண்டும்.

அதில், தூய்மை இந்தியா உறுதிமொழி என்ற கட்டத்துக்குள் பங்கேற்பாளா்கள் தங்களது தகவல்களை பதிவிட வேண்டும். இதையடுத்து, தூய்மை உறுதிமொழி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்படும். இந்த உறுதிமொழியைப் படித்த பின் அதற்கு ஒப்புதல் அளித்தால் மின்னணு முறையில், மாநகராட்சி ஆணையா் கையொப்பத்துடன் பங்கேற்பாளா்களுக்கான சான்றிதழ் வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com