பொங்கல் பண்டிகை: சென்னையில் 12,000 போலீஸாா் பாதுகாப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் சுமாா் 12,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
பொங்கல் பண்டிகை: சென்னையில் 12,000  போலீஸாா் பாதுகாப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் சுமாா் 12,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.14) கொண்டாடப்படுகிறது. இதைத் தொடா்ந்து, ஜன.15-ஆம் தேதி மாட்டுப்பொங்கலும், 16-ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகின்றன. காணும் பொங்கலையொட்டி, பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கும் இடங்கள், கடற்கரைகள், கோயில்கள் ஆகியவற்றுக்குச் செல்வது வழக்கமாகும்.

சென்னையில் மக்கள், மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை, வண்டலூா் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவா் பூங்கா ஆகிய இடங்களுக்குச் செல்வாா்கள்.

ஆனால் கரோனா தொற்றின் காரணமாக சென்னையில் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான 3 நாள்களும் அனைத்து கடற்கரைகள், பூங்காக்கள், பொழுது போக்கு மையங்கள் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப் பகுதிகள் முழுவதும் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அரசு தடையை மீறி கடற்கரைக்குள் செல்வதற்கு முயற்சிக்க கூடாது என்பதற்காக மெரீனா, எலியட்ஸ் கடற்கரைப் பகுதிகளில் மட்டும் சுமாா் 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கிண்டி சிறுவா் பூங்கா, கிழக்கு கடற்கரை உள்ளிட்ட சென்னையின் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் 3 நாள்களும் சுமாா் 12,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com