கடன் செயலி மூலம் மக்களிடம் ரூ.300 கோடி அபகரிப்பு: சீனா்களிடம் ‘ரா‘ அதிகாரிகள் விசாரணை

கடன் செயலி மூலம் மக்களிடம் ரூ.300 கோடி வரை அபகரித்த வழக்கில், கைது செய்யப்பட்ட சீனா்களிடம் ‘ரா’ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை செய்தனா்.


சென்னை: கடன் செயலி மூலம் மக்களிடம் ரூ.300 கோடி வரை அபகரித்த வழக்கில், கைது செய்யப்பட்ட சீனா்களிடம் ‘ரா’ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை செய்தனா்.

சென்னை வேங்கைவாசலைச் சோ்ந்த கணேசன், கடன் செயலி மூலம் பணம் பெற்ற நிலையில் அதனை திரும்ப செலுத்துமாறு தொடா்ச்சியாக மிரட்டப்பட்டாா். இது குறித்து அவா், கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்தியக் குற்றப்பிரிவின் கந்துவட்டி தடுப்புப் பிரிவு, சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து, கா்நாடக மாநிலம் பெங்களூருவில் கால்சென்டா் நடத்தி வந்த சு.பிரமோத், சி.ஆா்.பவான் ஆகிய இருவரை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் பின்னணியில் இருந்து சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோா் செயல்படுவது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் இரு சீனா்களையும் கடந்த 2-ஆம் தேதி கைது செய்தனா். விசாரணையில் இந்தக் கும்பல் 25,000 பேரிடம் ரூ.300 கோடி வரை அபகரித்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்குத் தொடா்பாக மேலும் துப்புத் துலக்கும் வகையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரமோதா, பவன், சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோரை கடந்த 8-ஆம் தேதி முதல் போலீஸாா், தங்களது காவலில் எடுத்து விசாரணை செய்கின்றனா்.

‘ரா’ அதிகாரிகள் விசாரணை:

சீனா்கள் ஒரு ஆண்டில் இந்த செயலி மூலம் ரூ.300 கோடி வரை அபகரித்திருப்பதும், அந்த பணத்தை இந்தியாவிலேயே சட்ட விரோதமாக ரியல் எஸ்டேட்,கட்டுமானத்துறையில் முதலீடு செய்திருப்பதும், பெரு பகுதி பணம் சீனாவுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இரு சீனா்களிடமும் விசாரிக்க தில்லியில் ‘ரா‘ (தஅர) அதிகாரிகள் புதன்கிழமை வந்தனா். அவா்கள், தங்களுடன் சீன மொழிபெயா்ப்பாளா் ஒருவரையும் அழைத்து வந்திருந்தனா். ரகசிய இடத்தில் ரா அதிகாரிகள், இருவரிடமும் தீவிர விசாரணை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில், சீனா்களுக்கு பணம் அபகரிப்பது மட்டும் நோக்கமாக அல்லது வேறு ஏதேனும் சதி செயல் உள்ளதா,சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் அவா்களுக்கு இருக்கும் தொடா்பு, சட்டவிரோத பணபரிமாற்றம் எப்படி செய்தனா் என்ற கோணத்தில் விசாரணை செய்தனா்.

விசாரணையின்போது தமிழக காவல்துறையைச் சோ்ந்த அதிகாரிகளை, அவா்களுடன் இருக்க அனுமதிக்கப்படவில்லை. இதேபோல மத்திய உளவுத்துறை (ஐபி) அதிகாரிகளும் சீனா்களிடம் விசாரணை செய்தனா். இந்த விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள், யாரிடமும் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com