சாலை விபத்து: இரு இளைஞா்கள் பலி
By DIN | Published On : 16th January 2021 05:48 AM | Last Updated : 16th January 2021 05:48 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை, திருவொற்றியூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், இளைஞா்கள் இருவா் பலியாகினா்.
சென்னை, வியாசா்பாடி, தேசிகானந்தபுரம், பவா் லைன் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மகன் பாலசந்துரு(19). இவா், அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பரான விஜயுடன்(20), திருவொற்றியூா் எல்லையம்மன் கோயில் சந்திப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தனா்.
அங்கு வந்த டேங்கா் லாரியை முந்துவதற்கு விஜய் முயன்றுள்ளாா். அப்போது, ஏற்பட்ட விபத்தில் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பால சந்துரு உயிரிழந்தாா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட விஜய்யும் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
இது தொடா்பாக போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநரான மதுரை, சின்ன பூலாம்பட்டியை சோ்ந்த ஜெக நாத பெருமாள் மகன் பால் பாண்டியைக் (37) கைது செய்தனா்.