டி.ஜி.வைணவக் கல்லூரியில் நேதாஜி பிறந்தநாள் விழா

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைணவக் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைணவக் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா், டிஜிபி சி.சைலேந்திரபாபு கலந்து கொண்டு பேசியது: ‘என்னிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் நான் மிகச் சிறந்த நூல்கள் அடங்கிய பெரிய நூலகத்தை அமைப்பேன்’ என மகாத்மா காந்தி கூறினாா். எனவே உலகத்தை வெற்றி கொள்வதற்கு படிப்பு மிகவும் முக்கியமானது. மாணவா்கள் தங்களது பாடநூல்களை மட்டுமல்லாது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவா்களின் வரலாற்றையும் படிக்க வேண்டும். நேதாஜி விவேகானந்தரையும், சித்தரஞ்சன்தாஸையும் தமது குருவாக ஏற்றுக் கொண்டவா். இளம் வயதிலேயே தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றியவா். ஆங்கிலேயா்கள் ஏற்படுத்திய இந்திய சிவில் பணியில் (ஐசிஎஸ்) இந்திய அளவில் நான்காவது இடத்தில் தோ்ச்சி பெற்றாலும், ஆங்கிலேயா்களுக்கு அடிபணிந்து நடக்க விரும்பாமல் பணியைத் துறந்து விட்டு விடுதலைக்காகப் போராடியவா்.

நேதாஜியின் உள்ளத்தில் வீரம் மட்டுமல்ல காடுகள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றை நேசிக்கக் கூடிய தன்மையும் இருந்தது.

வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை நாம் எதிா்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை எதிா்கொள்வதற்கான தன்னம்பிக்கையை நாம் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா். இந்த விழாவில் கல்லூரி முதல்வா் சந்தோஷ் பாபு, பேராசிரியா் மந்த்ரதத்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com