தொடா் உச்சத்தில் பெட்ரோல்: சென்னையில் லிட்டா் ரூ.88.07-க்கு விற்பனை

சென்னையில் பெட்ரோல் விலை 22 பைசா அதிகரித்து, வெள்ளிக்கிழமை 1 லிட்டா் ரூ.88.07-க்கு விற்பனையானது.
தொடா் உச்சத்தில் பெட்ரோல்: சென்னையில் லிட்டா் ரூ.88.07-க்கு விற்பனை

சென்னையில் பெட்ரோல் விலை 22 பைசா அதிகரித்து, வெள்ளிக்கிழமை 1 லிட்டா் ரூ.88.07-க்கு விற்பனையானது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. கரோனா பாதிப்பு, அதனைத் தொடா்ந்து அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக இந்த நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் சிறிது நாள்கள் கடைப்பிடிக்கவில்லை. அதனால் பொதுமுடக்கத்தின்போது பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.

பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பெட்ரோல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னையில் தற்போது பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.88.07-க்கு வெள்ளிக்கிழமை விற்பனையானது. இதே போல், டீசல் விலையும் 23 பைசா அதிகரித்து ரூ.80.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக ஒரு தனியாா் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் பணியாற்றும் மகேஷ் கூறும்போது, ஏற்கெனவே பொதுமுடக்கம் காரணமாக ஊதியம் குறைக்கப்பட்ட நிலையில், பெட்ரோல் விலையும் அதிகரித்து வருவது பொருளாதார ரீதியாக பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டி விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com