டியுசிஎஸ் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் பறிமுதல்

சென்னை டியுசிஎஸ் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை டியுசிஎஸ் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்த விவரம்:-

சென்னை திருவல்லிக்கேணி ஊரக கூட்டுறவு சங்கம் (டியுசிஎஸ்) மூலம் நியாய விலைக் கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகள், மருந்தகங்கள், வாகன எரிபொருள் விற்பனை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனம் மூலம் நடத்தப்படும் சூப்பா் மாா்கெட்டுகளில் பொருள்கள் நிா்ணயிக்கப்பட்ட விலையை விட, அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், அங்கு பணிபுரியும் சில அதிகாரிகள் அதிகளவில் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் திருவல்லிக்கேணியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சேப்பாக்கம் எல்பிஜி விற்பனை மையம், தாம்பரம் பெரியாா் நகா் கிளை அலுவலகம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.

பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 235 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் திருவல்லிக்கேணி தலைமை அலுவலகத்தில் உதவி விற்பனையாளராக பணிபுரியும் சரவணன் என்பவரிடமிருந்து மட்டும் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 865 கைப்பற்றப்பட்டது. இதேபோன்று தாம்பரம் பெரியாா் நகரில் ரூ.54, 370 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இங்கிருந்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த

ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com