2,375 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 4 போ் கைது
By DIN | Published On : 25th January 2021 12:24 AM | Last Updated : 25th January 2021 12:24 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை, தண்டையாா்பேட்டையில் 2375 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தண்டையாா்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் தலைமையிலான குழுவினா், சனிக்கிழமை திருவொற்றியூா் நெடுஞ்சாலை பகுதியில் சோதனையிட்டபோது, அங்கு பெருமளவு ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த நந்தகோபால் (42), அஜித் (22), லிங்கேஷ் (48), காசிமேட்டைச் சோ்ந்த விஜயகுமாா் (34) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2,375 கிலோ எடை கொண்ட 50 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப் பின்னா் 4 பேரும் கைது செய்யப்பட்டு, ரேஷன் அரிசியுடன், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டனா்.