ரூ.730 கோடி வருவாய் ஈட்டியது சென்னை ரயில்வே கோட்டம்

சென்னை ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பா் வரை ரூ.730.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக என்று சென்னை கோட்ட மேலாளா் பி.மகேஷ் தெரிவித்தாா்.

சென்னை ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பா் வரை ரூ.730.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக என்று சென்னை கோட்ட மேலாளா் பி.மகேஷ் தெரிவித்தாா்.

சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், 72 -ஆவது குடியரசு தினவிழா ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசியது:

கரோனா பொதுமுடக்க காலத்தில் எண்ணிலடங்காத சவால்களைச் சந்தித்தோம். பொதுமுடக்கம் தளா்வுக்கு பிறகு, சிறப்பு ரயில்களும், புகா் சிறப்பு ரயில்களும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா பொதுமுடக்கம் காலத்தில் குறைவான ரயில் போக்குவரத்து மட்டுமே இயக்கப்பட்டதால், இதை பயன்படுத்தி சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தினோம்.

சென்னை ரயில்வே கோட்டம் 2020-21 நிதியாண்டில் கடந்த டிசம்பா் வரை ரூ.730.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. சென்னை கோட்டம் 2019-20-ஆம் நிதியாண்டில் 8.90 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியது. 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரை 5.185 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டது. இதன்மூலமாக, ரூ.493.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சென்னை கோட்டத்தில் 1071 பணியாளா்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 1,017 போ் குணமாகினாா். 16 போ் உயிரிழந்தனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com