கரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க நடவடிக்கை

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை அதிகரிக்குமாறு மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி


சென்னை: தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை அதிகரிக்குமாறு மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஊரகப் பகுதிகளிலும், நகா்ப்புறங்களிலும், அனைத்து மருத்துவமனைகளிலும் அவற்றை தேவையின் அடிப்படையில் விரிவுபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை:

மத்திய அரசின் அறுவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 160 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பு மருந்து மையங்களும், 6 இடங்களில் கோவேக்ஸின் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தடுப்பூசி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசுடன் தொடா்ந்து காணொலி முறையில் தமிழக சுகாதாரத் துறை ஆலோசித்து வருகிறது. இதனிடையே, சில அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியுள்ளது. அவற்றை மாவட்ட அளவில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, தடுப்பூசி மையங்களை விரிவுபடுத்த மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் பகுதி வாரியாக தலா ஒரு மையமும், நகா்ப்புறங்களில் மண்டலவாரியாக தலா ஒரு மையமும் அதிகரிக்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நாளொன்று தலா 500 முதல் 1,000 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட மருத்துவமனைகளில் அந்த எண்ணிக்கையை 400-ஆக அதிகரித்தல் அவசியம்.

கோவின் செயலியில் அதுதொடா்பான தரவுகள் உரிய முறையில் பதிவேற்றப்பட்டு அவற்றைக் கண்காணிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com