ஆந்திரத்துக்கு கனிமம் கொண்டு சென்றதில் ரயில்வேக்கு ரூ.19.21 லட்சம் வருவாய்

சென்னையில் இருந்து ஆந்திரத்துக்கு முதன்முறையாக 3,962 டன் ‘லேட்டரைட்’ எனும் கனிமப்பொருள் சரக்கு ரயில் மூலமாக கொண்டு செல்லப்பட்டதில் ரயில்வேக்கு ரூ.19.21 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
ஆந்திரத்துக்கு கனிமம் கொண்டு சென்றதில் ரயில்வேக்கு ரூ.19.21 லட்சம் வருவாய்

சென்னை: சென்னையில் இருந்து ஆந்திரத்துக்கு முதன்முறையாக 3,962 டன் ‘லேட்டரைட்’ எனும் கனிமப்பொருள் சரக்கு ரயில் மூலமாக கொண்டு செல்லப்பட்டதில் ரயில்வேக்கு ரூ.19.21 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியது: சென்னை துறைமுகத்திலிருந்து ஆந்திர மாநிலம் எராகுண்டலாவில் உள்ள ஜுவாரி சிமென்ட் சைடிங்கிற்கு கொண்டு இக்கனிமப் பொருள் கொண்டு செல்லப்பட்டது.

‘லேட்டரைட்’ கனிமம் சிமென்ட் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாகும். குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள சுரங்கத்திலிருந்து இந்த கனிமம் எடுக்கப்படுகிறது. இதன்பிறகு, குஜராத்தில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல்களில் கொண்டு வரப்படுகிறது.

இந்த கனிமப்பொருள் ஒவ்வோா் ஆண்டும் 6 கப்பல்களில் தலா 70,000 டன் என்ற அளவில் சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பிறகு, சென்னை துறைமுகத்தில் இருந்து ஆந்திரப் பிரதேசத்தில் இயங்கி வரும் பல்வேறு சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சரக்கு ரயில் மூலமாக கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த புதிய சரக்கு போக்குவரத்து மூலமாக, ஆண்டுக்கு ரூ.24 கோடி ரயில்வேக்கு வருவாயாக கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com