பொதுமுடக்கம் மீறல்: 148 வழக்குகள்; 159 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 06th July 2021 06:35 AM | Last Updated : 06th July 2021 06:35 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,159 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்த விவரம்:
தமிழக அரசு கடந்த மே 10-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தியது. இருப்பினும் கரோனா பரவல் குறைந்து வருவதால் பொதுமுடக்கத்தில் இருந்து கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் படிப்படியாக ஒவ்வொரு வாரமும் தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
பொதுமுடக்கத்தை கண்காணிக்கும் வகையில் சென்னையில் 380 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்க மீறல் தொடா்பாக 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 159 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல முக்கவசம் அணியாதவா்கள் மீது 860 வழக்குகளும், தனி நபா் இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது 24 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.