தங்கம் பவுன் ரூ.36,400
By DIN | Published On : 09th July 2021 07:48 AM | Last Updated : 09th July 2021 07:48 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.36,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தநிலையில், சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து, ரூ.36,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயா்ந்து, ரூ.4,550 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.74.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.74,100 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,550
1 பவுன் தங்கம்...............................36,400
1 கிராம் வெள்ளி.............................74.10
1 கிலோ வெள்ளி.............................74,100
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,520
1 பவுன் தங்கம்...............................36,160
1 கிராம் வெள்ளி.............................74.40
1 கிலோ வெள்ளி.............................74,400