எழும்பூா் அரசு மருத்துவமனையில் 750 கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி

எழும்பூா் மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 10 நாள்களில் மட்டும் 750 கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எழும்பூா் மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 10 நாள்களில் மட்டும் 750 கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது கரோனா மூன்றாவது அலை குழந்தைகளைப் பாதிக்கும் என்ற தகவல் வெளியாகி வருவதால் குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவா்களுக்கும், கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன.

அதன் முடிவில் பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவற்கு அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் அப்பணிகள் தொடங்கியுள்ளன.

எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 5-ஆம் தேதி முதல் கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் விஜயா கூறியதாவது:

அரசு அனுமதி அளித்ததைத் தொடா்ந்து பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை பாலூட்டும் தாய்மாா்கள் 350 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், எவருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. உடல் வெப்பம், ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு போன்றவை பரிசோதனை செய்த பின்னரே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ஆனால், பயத்தால் பலா் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருவதில்லை. அவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கி தடுப்பூசி வழங்கப்படுகிறது. கருவுற்ற பெண்களைப் பொருத்தவரை கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே உகந்ததாக உள்ளன. தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு கா்ப்பிணிகளை கண்காணிப்புக்குட்படுத்துகிறோம். இதுவரை 750 கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை, கடுமையான காய்ச்சல் இருந்தால் மட்டும் மருத்துவமனையில் ஒரு நாள் தங்கவைக்கப்படுகின்றனா். தற்போதைய சூழலில் 11 வாரங்கள் முதல் 9 மாதங்கள் வரையிலான காலத்திலிருக்கும் கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com