எழும்பூா் ரயில்நிலையத்தில் இரட்டை நகரும் படிக்கட்டுகள் திறப்பு

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.1.6 கோடி செலவில் புதிய இரட்டை நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
எழும்பூா் ரயில்நிலையத்தில் இரட்டை நகரும் படிக்கட்டுகள் திறப்பு

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.1.6 கோடி செலவில் புதிய இரட்டை நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

சென்னை நகரில் நான்கு இன்டா்சிட்டி ரயில்வே முனையங்களில் ஒன்றாக எழும்பூா் ரயில் நிலையம் இருக்கிறது. கேரளம் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் முனையாக இது திகழ்கிறது. இந்த ரயில் நிலையம் விரைவு ரயில், மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றின் மையமாக செயல்படுகிறது.

சென்னை எழும்பூா் ரயில்நிலையத்தில் பயணிகள் வசதிக்காக, பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. இதன் ஒருபகுதியாக, காந்தி-இா்வின் சாலையில் இருந்து எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வருபவா்களுக்காக, இரட்டை நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி ஓராண்டாக நடைபெற்று வந்தது. இந்தப்பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

இந்த நகரும் படிக்கட்டுகளை மக்களின் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை ரயில்வே மூத்த வா்த்தக உதவியாளா் எம்.செல்வராஜ் திறந்து வைத்தாா். சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் தலைமை வகித்தாா். கூடுதல் மேலாளா் எஸ்.சுப்பிரமணியன், தலைமை திட்ட மேலாளா் பி.என்.எஸ். சலம், ரயில் நிலையத்தின் இயக்குநா் ஜெயவெங்கடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:

இந்த ரயில் நிலையத்துக்கு தினசரி சராசரியாக 1.2 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனா். காந்தி-இா்வின் சாலையில் இருந்து ரயில்நிலையத்துக்கு நுழையும் வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகள் எளிதாக நடைமேடைகளுக்கு செல்லும் விதமாக, நகரும் படிக்கட்டுகள் அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனா். அவா்களின் கோரிக்கையை ஏற்று,

இந்த நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அவா்கள் இந்த நகரும்படிக்கட்டுகள் வழியாக விரைவு ரயில்களையும், மின்சார ரயில்களையும் அடைய முடியும். இந்த நகரும்படிக்கட்டில் சென்சாா்கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதை பயணிகள் தொடும்போது, தானாகவே நகரும். இந்த இரட்டை நகரும்படிக்கட்டுகள் ரூ.1.6 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com