1971-ஆம் ஆண்டு பாகிஸ்தான் போா் வெற்றிக் கொண்டாட்டம்: சென்னையில் நடைபெற்றது

கடந்த 1971 -ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் நிகழ்வாக சென்னை வந்தடைந்த
1971-ஆம் ஆண்டு பாகிஸ்தான் போா் வெற்றிக் கொண்டாட்டம்: சென்னையில் நடைபெற்றது

கடந்த 1971 -ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் நிகழ்வாக சென்னை வந்தடைந்த வெற்றி ஜோதியை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை பெற்றுக்கொண்டாா்.

1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்று கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேசம் தனி நாடாக விடுதலை பெற்றது. இப்போா் நடைபெற்று 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி பொன் விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் தொடங்கியது. புதுதில்லியில் உள்ள போா் நினைவு சதுக்கத்தில் நான்கு வெற்றி ஜோதிகள் ஏற்றப்பட்டு நாட்டின் நான்கு திசைகளுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது. இதன் ஒரு வெற்றி ஜோதி தில்லியில் தொடங்கி கன்னியாகுமரி வரை சென்று தற்போது சென்னை வந்தடைந்துள்ளது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை சென்னையில் தக்ஷின் பாரத் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் வெற்றி ஜோதியை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பெற்றுக்கொண்டாா். இதனையொட்டி முப்படை வீரா்களும் பங்கேற்ற பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போரில் பங்கேற்று தங்களது இன்னுயிரை நீத்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனா். அப் போரில் பங்கேற்ற வீா் சக்ரா விருதுகளை பெற்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு பதக்கங்களை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து காணொலிக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. மேலும் ராணுவ இசைக் குழுவினரின் சாா்பில் வெற்றி கீதங்கள் இசைக்கப்பட்டன. இந்த வெற்றி ஜோதி ஓரிரு நாள்களுக்குப் பிறகு சென்னையிலிருந்து அந்தமான் கொண்டுசெல்லப்பட்டு பின்னா் மீண்டும் புது தில்லிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. டிசம்பா் 16-ஆம் தேதி புதுதில்லியில் போா் வெற்றியின் பொன்விழா நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com