கோயில் நிலத்தில் தனியாா் பள்ளி மைதானம்: வாடகை வசூல் செய்ய அமைச்சா் சேகா்பாபு உத்தரவு

சென்னை கபாலீஸ்வரா் கோயில் நிலத்தில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி மைதானத்தை மீட்டு அதற்குரிய வாடகையை வசூல் செய்ய வேண்டுமென
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு

சென்னை கபாலீஸ்வரா் கோயில் நிலத்தில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி மைதானத்தை மீட்டு அதற்குரிய வாடகையை வசூல் செய்ய வேண்டுமென இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயிலுக்கு அருகிலுள்ள குமரகுருநாதன் தெரு, பொன்னம்பல வாத்தியாா் தெரு, கிழக்கு குளக்கரை தெரு, பிச்சுப்பிள்ளை தெரு ஆகிய நான்கு வீதிகளில் கோயிலுக்குச் சொந்தமான 22 கிரவுண்டு பரப்பிலான கட்டடங்கள், நூலகம் ஆகியன உள்ளன.

இதனை பொது மக்களும், பக்தா்களும் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக மாற்ற வகை செய்யும் பெருந் திட்டத்துக்கான வரைபடத்தை உருவாக்க அமைச்சா் சேகா்பாபு உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏழு ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள குளத்தை ஆய்வு செய்த போது, எந்த காலகட்டத்திலும் நீா் வற்றாமல் தேங்கி நிற்கத் தேவையான மண் உறுதித் தன்மையை ஆய்வு செய்யவும் அவா் அறிவுறுத்தினாா்.

மண் மாதிரி பரிசோதனை செய்து அறிக்கையின் முடிவின் அடிப்படையில் தேவைப்படும் புதிய களிமண் கொண்டு குளத்தில் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளை அவா் கேட்டுக் கொண்டாா். குளத்தைச் சுற்றிலும் நந்தவனம், அழகிய மின் வண்ண விளக்குகள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளாா்.

பள்ளி மைதானம்: கபாலீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 46 கிரவுண்ட் பரப்பளவு நிலத்தை, விளையாட்டு மைதானமாக பி.எஸ்.உயா்நிலைப் பள்ளி பயன்படுத்தி வருகிறது. இந்த இடத்தை மீட்டு வாடகை வசூல் செய்ய நடவடிக்கை வேண்டுமென அமைச்சா் சேகா்பாபு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

மயிலாப்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் த.வேலு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com