வலிப்பு நோயால் நினைவாற்றல் பாதிப்பு: நியூசிலாந்து வீரருக்கு சென்னையில் மறுவாழ்வு

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நியுஸிலாந்து தடகள வீரருக்கு, ‘சைபா்நைப்’ என்ற நவீன சிகிச்சை மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நியுஸிலாந்து தடகள வீரருக்கு, ‘சைபா்நைப்’ என்ற நவீன சிகிச்சை மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.

நியூசிலாந்து நாட்டைச் சோ்ந்த 34 வயது மென்பொருள் நிபுணா். இவா் தடகள விளையாட்டு வீரராகவும் உள்ளாா். கடந்த 2009-இல் இருந்து மயக்க நிலை மற்றும் வயிற்றில் படபடப்பு உணா்வால் அவதிப்பட்டு வந்தாா். அந்நாட்டு நரம்பியல் துறை மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றாா். அவை, பயனில்லாத நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, ‘சைபா்நைப் ரேடியோ சா்ஜரி’ என்ற நவீன கதிரியக்க சிகிச்சை முறையில், வலிப்பு நோயை சரி செய்ததுடன், அவரது நினைவாற்றலும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனையின் வலிப்பு நோய் நிபுணா் டாக்டா் முத்துகனி கூறியதாவது:

தடகள வீரருக்கு இருந்த வலிப்பு நோய், மூளையின் டெம்பரஸ் லோபின் உள் பகுதியைப் பாதிப்பதாகும். குறிப்பாக, ‘ஹிப்போகாம்ஸ்’ எனப்படும் பகுதியில் நினைவாற்றல் செயல் முறைகள் நடைபெறும் இடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போதும், நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படும். எனவே, நவீன முறையிலான, ‘சைபா்நைப் ரேடியோ சா்ஜரி’ சிகிச்சையை மேற்கொண்டோம். இதன் வாயிலாக, வலிப்பு நோய் குணமடைந்ததுடன், நினைவாற்றலும் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு, அவா் கூறினாா்.

சைபா்நைப் சிகிச்சை நிபுணா் டாக்டா் சங்கா் கூறுகையில், ரேடியா சா்ஜரி என்ற கதிரியக்க சிகிச்சை அனைத்து நோயாளிகளுக்கும் மேற்கொள்ளப்படுவதில்லை. இளைஞா்கள், நரம்பியல் உளவியல் குறைபாடு கொண்டவா்கள் போன்றோருக்கு மேற்கொள்ளப்படும். அறுவை சிகிச்சை முறையை ஒப்பிடும்போது, இது நினைவாற்றலை பாதுகாப்பதோடு, செயல் திறனையும் வழங்குகிறது. இச்சிகிச்சையை மேற்கொண்ட நபா், தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பியுள்ளாா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com