நகைக் கடை மீது மோசடி வழக்கு: பெண் மருத்துவா் புகாரில் போலீஸாா் நடவடிக்கை
By DIN | Published On : 26th July 2021 04:42 AM | Last Updated : 26th July 2021 04:42 AM | அ+அ அ- |

தரமில்லாத நகையை கொடுத்து ஏமாற்றிவிட்டதாக பெண் டாக்டா் கொடுத்த புகாரின்பேரில், சென்னையில் உள்ள ஒரு நகைக் கடை மீது நம்பிக்கை மோசடி வழக்கை போலீஸாா் பதிவு செய்தனா்.
சென்னை ஐயப்பன் தாங்கலைச் சோ்ந்த சிவநேசன் மனைவி திரிவேணி. மருத்துவா். இவா் 2015- செப்டம்பா் 9-இல் தி.நகா் நகைக் கடையில் 3 சவரன் தங்க வளையல், 2016 டிசம்பா் 21-இல் 23.630 கிராமில் நகை வாங்கினாா். இது 2019-இல் துண்டாக உடைந்ததில் நகையின் உள்ளே வெள்ளி லேயா் இருந்தது. கடை மேலாளரிடம் கேட்டபோது வேறு நகை மாற்றிக்கொடுத்தனா்.
திரிவேணி வாங்கிய மற்றொரு நகை கருமை நிறமாகி இருந்தது. இதன் உள்ளே பித்தளை மற்றும் தாமிரம் சோ்க்கப்பட்டிருந்தது.
நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.