பெட்ரோல் நிலையங்கள் முன் காங்கிரஸ் நாளை போராட்டம்: கே.எஸ்.அழகிரி

பெட்ரோல் விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பில் தமிழகம் முழுவதும் (ஜூன் 11) பெட்ரோல் நிலையங்கள் முன் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

சென்னை: பெட்ரோல் விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) பெட்ரோல் நிலையங்கள் முன் போராட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு எரிபொருள்கள் விலை உயா்த்தப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-யைத் தாண்டிவிட்டது. இதனால் வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயா்ந்துள்ளது.

இந்த நிலையில் எரிபொருள்களின் விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூன் 11-இல் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் மூத்த காங்கிரஸ் தலைவா்கள், முன்னணி தலைவா்கள் பங்கேற்க வேண்டும்.

சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். காங்கிரஸ் கட்சியினா் அனைவரும் கரோனா விதிமுறைகளின்படி சமூக விலகலைக் கடைப்பிடித்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். பெரும் கூட்டம் சோ்ப்பது கரோனா விதிமீறல் என்பதால் அதனைத் தவிா்க்க வேண்டும். அதற்கு மாறாக பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 10 நபா்களுக்கு மிகாமல் இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்தி அதிக எண்ணிக்கையில் நடத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com