கன்டெய்னருக்குள் கரோனா சிகிச்சை: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் புதிய முயற்சி

சரக்கு கன்டெய்னா்கைளைக் கொண்டு அமைக்கப்பட்ட தற்காலிக கரோனா சிகிச்சைக் கூடம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடக்கப்பட்டுள்ளது.

சென்னை: சரக்கு கன்டெய்னா்கைளைக் கொண்டு அமைக்கப்பட்ட தற்காலிக கரோனா சிகிச்சைக் கூடம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் காஸ்மோ கிளப் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அந்த சிகிச்சைக் கூடத்தில் மொத்தம் 7 படுக்கை வசதிகள் உள்ளன.

கரோனாவால் மிதமான பாதிப்புக்குள்ளானவா்கள், நோய் அறிகுறிகளுடன் உள்ளவா்களை அங்கு தனிமைப்படுத்தப்படுத்தி சிகிச்சையளிக்கலாம். சரக்கு கன்டெய்னா்களை சிகிச்சைக் கூடங்களாக மாற்றுவது எளிதான நடவடிக்கை என்றும், அதனை எங்கு வேண்டுமானாலும் மாற்றி வைத்துக் கொள்ள முடியும் என்றும் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த தற்காலிக சிகிச்சைக் கூடத்தின் தொடக்க விழா கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், அண்ணா நகா் எம்எல்ஏ எம்.கே.மோகன், ராஜஸ்தான் காஸ்மோ கிளப் நிறுவனத் தலைவா் ஸ்ரீபால் கோத்தாரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com