காவலர்களுக்கு கரோனா மருத்துவ முகாம்

சென்னையில் காவலர்களிடம் கரோனா தொற்று பரவுவதைத்  தடுக்கும் வகையில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
பணியில் உள்ள காவலர்களின் உடல் நலன் காக்கும் நடமாடும் மருத்துவ குழுக்கள் முகாமை சென்னை அமைந்தகரை அண்ணா வளைவு அருகே தொடக்கி வைத்த போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பிரதீப் குமார்.
பணியில் உள்ள காவலர்களின் உடல் நலன் காக்கும் நடமாடும் மருத்துவ குழுக்கள் முகாமை சென்னை அமைந்தகரை அண்ணா வளைவு அருகே தொடக்கி வைத்த போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பிரதீப் குமார்.

சென்னை: சென்னையில் காவலர்களிடம் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
கரோனா தடுப்பு பணியில் காவல் துறையினரும் முன்களப் பணியாளர்களாக உள்ளனர். கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் அரசு அறிவித்த முழு பொதுமுடக்கத்தை காவல்துறையினரே தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இதனால் காவல்துறையினரிடம் எளிதாக கரோனா தொற்று பரவி வருகிறது.
கரோனா தொற்றில் இருந்து போலீஸôர் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம், முகத்தடுப்பு கவசம், கையுறை ஆகியவை அணிய வேண்டும், பொதுமக்களிடம் தனி நபர் இடைவெளியைப் பின்பற்றிய பேச வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் காவல்துறையினர் கணிசமான அளவு கரோனா தொற்றால் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதைத் தடுக்கும் வகையில் போலீஸôர் தினமும் 3 ஷிப்டுகளில் பணியமர்த்தப்பட வேண்டும்,அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் காவலர்களுக்கான இலவச நடமாடும் மருத்துவ முகாம் தொடக்க விழா அமைந்தகரையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் பிரதீப்குமார் தொடக்கி வைத்து பேசினார்.
இந் நிகழ்ச்சியில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரக இயக்குநர் எஸ்.கணேஷ், போக்குவரத்துப்பிரிவு இணை ஆணையர் (வடக்கு) ஆர்.லலிதா லட்சுமி, துணை ஆணையர் (மேற்கு) எம்.எம்.அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாம், நகரின் பிறபகுதிகளில் காவலர்களுக்காக தொடர்ந்து நடத்தப்படஉள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com