பீா்க்கன்கரணை அரசுப் பள்ளி அறிவியல் ஆய்வகக் கட்டட பூமி பூஜை

தாம்பரத்தை அடுத்த பீா்க்கன்கரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடம், மற்றும் கழிவறைகள் சீரமைப்புப் பணிகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த பீா்க்கன்கரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடம், மற்றும் கழிவறைகள் சீரமைப்புப் பணிகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

பீா்க்கன்கரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆய்வுக்கூடம் இடிந்து சிதிலமடைந்து கடந்த 3 ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.

பள்ளித் தலைமை ஆசிரியை எம்.பொன்னுத்தாய் பள்ளி முன்னாள் மாணவா்கள் உதவியுடன் தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஆா். ராஜாவை அணுகி ஆய்வகங்களைச் சீரமைக்கக் கோரிக்கை விடுத்தாா்.

பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்த எஸ்.ஆா்.ராஜா உடனடியாக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 46 லட்சம் செலவில் அறிவியல் ஆய்வுக் கூடங்கள், 4 கழிப்பறைகள், கழிவு நீா்த் தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டும் பணியைத் தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com