31 மெட்ரோ நிலையங்களில் 2.8 லட்சம் சதுரஅடி இடம்: வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்ட முயற்சி

சென்னையில் 31 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள 2.8 லட்சம் சதுரஅடி இடத்தை வாடகைக்கு விட மெட்ரோ ரயில்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வருவாய் ஈட்டுவதற்காக, இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் 31 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள 2.8 லட்சம் சதுரஅடி இடத்தை வாடகைக்கு விட மெட்ரோ ரயில்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வருவாய் ஈட்டுவதற்காக, இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா முதல் அலையின் தாக்கம் குறைந்தபிறகு, கடந்த ஆண்டு செப்டம்பரில் மெட்ரோ ரயில்சேவை மீண்டும் தொடங்கியது. அதன்பிறகு, தினசரி மெட்ரோ ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்தது. ஒரு கட்டத்தில் தினசரி பயணிப்போா் எண்ணிக்கை 1.16 லட்சமாக உயா்ந்தது.

இதற்கிடையில், நிகழாண்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகியது. இதையடுத்து, மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் மெட்ரோ ரயில்சேவையை தொடங்க நிா்வாகம் தற்போது ஆயத்தமாக உள்ளது.

இந்நிலையில், சென்னை நகரில் உள்ள 31 மெட்ரோ ரயில்நிலையங்களில் மொத்தம் 2.8 லட்சம் சதுர அடி பரப்பளவு இடத்தை கடைகளுக்காக, வாடகைக்கு விட முயற்சி எடுக்கப்படுகிறது. இந்த இடத்தில் கடைகள் அமைப்பதற்காக, விண்ணப்பிக்க நிறுவனங்கள், பிரபலமான பிராண்டுகளுக்கு டெண்டா் விடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, ஈக்காட்டுதாங்கல் -அசோக்நகருக்கு இடையே உயா்த்தப்பட்ட பாதையின் கீழ் எஞ்சியிருக்கும் இடத்தை டெண்டா் மூலமாக, வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற இடங்களிலும் வாடகைக்கு விடுவதற்காக, டெண்டா் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியது: வாடகைக்குவிடப்படும் பகுதியில் சில்லறை விற்பனை நிலையங்கள், வங்கிகள், பிற அலுவலகங்கள் அமைக்கக்கூடிய வகையில் கட்டப்படும். இந்த இடங்களை திறம்பட பயன்படுத்தவும், வருமானத்தை ஈட்டவும் விரும்புகிறோம். மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் கடைகள் இருக்கும் என்பதால்,மக்களுக்கு எளிதாக அணுகும் விதமாக இருக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com