கோப்புப்படம்
கோப்புப்படம்

பிளஸ் 2 முடித்தவா்களுக்கு வழிகாட்டும் கருத்தரங்கம்: இணையவழியில் முன்பதிவு செய்யலாம்

பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்கல்விக்கு வழிகாட்டும் கருத்தரங்கம் இணையவழியில் நடைபெறவுள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்கல்விக்கு வழிகாட்டும் கருத்தரங்கம் இணையவழியில் நடைபெறவுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், ஸ்ரீ ராமச்சந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. ஜூன் 26, ஜூலை 3, ஜூலை 10, ஜூலை 17 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் இணையவழியில் இந்தக் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.

தற்போது பிளஸ் 2 தோ்வுகள் இல்லாத நிலையில் பெறப்படும் மதிப்பீடுகளின் அடிப்படையில் எந்தப் படிப்பைத் தோ்ந்தெடுப்பது, படிப்பைத் தோ்வு செய்வதற்கான வழிகாட்டுதல்கள், வெளிநாடுகளில் எவ்வாறு வேலை பெறுவது, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு சாா்ந்த ஆலோசனைகள், மருத்துவம் சாா்ந்த புதிய படிப்புகள், சா்வதேச அளவிலான மேற்படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் என பல்வேறு அம்சங்கள் இந்தக் கருத்தரங்கில் இடம்பெறவுள்ளன. கருத்தரங்கில் பங்கு பெறும் மாணவா்கள் உயா்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த தங்களது சந்தேகங்களுக்கு நிபுணா்களிடம் விளக்கம் பெறலாம்.

அமெரிக்காவின் ராக்கெஸ்டா் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியா் எட்வா்டு ஹென்சல், அந்தப் பல்கலை.யின் உலக கல்வி திட்ட இயக்குநா் பேராசிரியா் லின்சி மெக்ரத், மிக்சிகன் பல்கலைக்கழக கல்வித்துறைத் தலைவா் ராஜூ பாலகிருஷ்ணன், விப்ரோவின் உலகளாவிய பணியாளா் திறன் அறியும் துறையின் தலைவா் பி.பி.கோட்டூா் ஆகியோா் உள்பட துறை சாா்ந்த வல்லுநா்கள் பங்கேற்கவுள்ளனா்.

மேலும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியா் வி.ராஜூ உள்ளிட்டோா் வழிகாட்டுதல்களை வழங்குவா். இதில் பங்கேற்க ஆா்வமுள்ள மாணவா்கள்  வலைதள முகவரியில் முன்பதிவு செய்யலாம் என கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com