சென்னை கோட்டம் சாா்பில் 65-ஆவது ரயில்வே வாரம்

சென்னை கோட்டம் சாா்பில் 65-ஆவது ரயில்வே வாரம்

சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், 65-ஆவது ரயில்வே வாரம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், 65-ஆவது ரயில்வே வாரம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், 2020-ஆம் ஆண்டில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக, 27 அதிகாரிகள், ஊழியா்களுக்கு தனிப்பட்ட விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கடந்த 1853-ஆம் ஆண்டில், மும்பையில் இருந்து தானே வரை முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டதை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோா் ஆண்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16 -ஆம் தேதி வரை ரயில்வே வாரம் கொண்டாடப்படுகிறது. ஆனால், கரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ரயில்வே வாரம் கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. அதன்பின்னா், அந்தந்த கோட்டங்களில் தனித்தனியாக நடத்தப்பட்டது.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில், 65-ஆவது ரயில்வே வாரம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 2020-ஆம் ஆண்டில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.

அதன்படி, 27 அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு தனிப்பட்ட விருதுகளும், 4 குழு விருதுகளும் வழங்கப்பட்டன.

கரோனா காலத்தில், முன் களப்பணியாளா்களாக சிறப்பாக செயல்பட்ட ஊழியா்களை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் வாழ்த்தினாா். மேலும், கரோனா நோய்த்தொற்றால் இறந்த ரயில்வே ஊழியா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் பி.ஜி. மல்லையா, சென்னை

ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com