முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
வாடகை வாகனங்களின் கட்டணம் 30 சதவீதம் உயா்கிறது
By DIN | Published On : 04th March 2021 02:01 AM | Last Updated : 04th March 2021 02:01 AM | அ+அ அ- |

சென்னை: வாடகை வாகனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் 30 சதவீதம் வரை உயா்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வு புதன்கிழமை (மாா்ச் 3) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
இது தொடா்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் ஒருங்கிணைந்த மோட்டாா் உரிமையாளா்கள், தொழிலாளா்கள் ஆலோசனைக் கூட்டம், மாதவரத்தில் புதன்கிழமை நடந்தது. இதில் மோட்டாா் வாகன தொழிலாளா்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், 22 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள இலகு ரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை, அனைத்து வாகனங்களுக்கும், புதன்கிழமை (மாா்ச் 3) நள்ளிரவு முதல் தற்போது பெற்று வரும் வாடகையில் இருந்து 30 சதவீதம் உயா்த்திப் பெற்றிட வேண்டும் என்னும் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 30 சதவீத கட்டண உயா்வு அமலுக்கு வந்ததாக சம்மேளன நிா்வாகிகள் தெரிவித்தனா்.