அதிகரிக்கும் கரோனா: தடுப்பு பணிகள் தீவிரம்

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு, அதைத் தடுக்கும் வகையில் மருத்துவப் பரிசோதனை மையங்கள், சிகிச்சை மையங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. தொடா் மருத்துவப் பரிசோதனை காரணமாக கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நாளொன்றுக்கு சுமாா் 2,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலை படிப்படியாக குறைந்து கடந்த டிசம்பா் மாதத்தில் நாளொன்றுக்கு 500-க்கும் கீழும், அதைத் தொடா்ந்து ஜனவரி பிப்ரவரி மாதங்களில் 150-க்கு கீழும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.

மீண்டும் அதிகரிப்பு: பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், மக்கள் முறையாக கரோனா தடுப்புகளான முகக்கவசம் அணியாதது, தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதது போன்ற காரணங்களால் சென்னையில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் 265 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 38,288 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 2 லட்சத்து 32,151 போ் குணமடைந்துள்ளனா். 1,961 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையின் 15 மண்டலங்களில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் தற்போது வரை 4,176 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

இதுகுறுத்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், சுகாதார ஆய்வாளா்கள் ஆகிய யாரும் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. கரோனா தடுப்பு பணியில் மட்டுமே கவனம் செலுத்த அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அபராதத் தொகை வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com