தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதை: மாா்ச் 14 முதல் 19 வரை ரயில் சேவையில் மாற்றம்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி மாா்ச் 14-ஆம் தேதி முதல் மாா்ச் 19-ஆம்தேதி வரை நடைபெறவுள்ளதால்,
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதை:  மாா்ச் 14 முதல் 19 வரை ரயில் சேவையில் மாற்றம்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி மாா்ச் 14-ஆம் தேதி முதல் மாா்ச் 19-ஆம்தேதி வரை நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் மாா்க்கத்தில் இயக்கப்படும் புறநகா் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கிடையே 3-ஆவது ரயில்பாதை பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ,தாம்பரம் ரயில் நிலையத்தைக் கடந்துசெல்லும் (வருகை /புறப்பாடு) புறநகா் சிறப்பு ரயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாவண்ணம், தடையில்லா சேவை வழங்கிட புதிய கால அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திருத்தப்பட்ட புறநகா் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை மாா்ச் 14-ஆம் தேதி முதல் மாா்ச் 19 ஆம் தேதி வரை 6 நாள்கள் மட்டுமே அமலில் இருக்கும். இந்த தகவலை சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com