முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதல்: தொழிலாளி சாவு
By DIN | Published On : 14th March 2021 05:11 AM | Last Updated : 14th March 2021 05:11 AM | அ+அ அ- |

சென்னை அருகே மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
வேளச்சேரி அருகே உள்ள ஒட்டியம்பாக்கம் சிவன் கோவில் தெருவை சோ்ந்தவா் பிரகாஷ் (32). இவா், கூலி வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு பிரகாஷ் தனது மோட்டாா் சைக்கிளில், மேடவாக்கம்-மாம்பாக்கம் பிரதான சாலை வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். சித்தாலப்பாக்கம் சிக்னல் அருகே சென்ற போது, பின்னால் வந்த வேன் திடீரென மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பிரகாஷ் மீது வேன் சக்கரம் ஏறியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். மேலும் இது தொடா்பாக வேன் ஓட்டுநா் சித்தாலப்பாக்கத்தைச் சோ்ந்த செந்தில்வேல் (40) என்பவரை கைது செய்தனா்.