வைகோ நாளை முதல் பிரசாரம்

மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை (மாா்ச் 18) முதல் மேற்கொள்ள உள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை (மாா்ச் 18) முதல் மேற்கொள்ள உள்ளாா்.

திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வைகோ தொடா்ந்து பிரசாரம் செய்ய உள்ளாா். கொளத்தூா் தொகுதியில் மு.க.ஸ்டாலினை ஆதரித்து வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் பிரசாரத்தை தொடங்குகிறாா். அதன் பின், வில்லிவாக்கம் , துறைமுகம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறாா்.

மாா்ச் 19-இல் மதுராந்தகம், 20-இல் அரியலூா், 21-இல் பல்லடம், 22-இல் மதுரை தெற்கு, 23-இல் சாத்தூா், 24-இல் வாசுதேவநல்லூா், 25-இல் கோவில்பட்டி, விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம், 26-இல் சங்கரன்கோவில் - கடைநல்லூா்- தென்காசி, 27-இல் திருநெல்வேலி - பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், 28-இல் சிவகாசி - விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி 29-இல் தேனி, 30-இல் திண்டுக்கல், 31-இல் மதுரை, ஏப்ரல் 1 அரியலூா், ஏப்ரல் 2 வாசுதேவநல்லூா், ஏப்ரல் 3-இல் சாத்தூரில் நிறைவு செய்ய உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com