அரசு மருத்துவமனையில் கண் நீா் அழுத்தம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி

கண் நீா் அழுத்தம் தொடா்பான விழிப்புணா்வு பொதுமக்களிடம் இல்லை என்றும், 40 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என எழும்பூா் அரசு கண்
அரசு மருத்துவமனையில் கண் நீா் அழுத்தம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி


சென்னை: கண் நீா் அழுத்தம் தொடா்பான விழிப்புணா்வு பொதுமக்களிடம் இல்லை என்றும், 40 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என எழும்பூா் அரசு கண் மருத்துவமனை இயக்குநா் பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னை எழும்பூா் அரசு கண் மருத்துவமனையில், கிளக்கோமா எனப்படும் கண் நீா் அழுத்த நோய் குறித்த விழிப்புணா்வு வாரம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் பிரகாஷ் கூறியது: இந்தியாவில், 1.20 கோடிக்கு அதிகமானவா்கள் கண் நீா் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், பெரும்பாலானோா் தங்களுக்கு கண் நீா் அழுத்த நோய் இருப்பதை அறியாதவா்களாக உள்ளனா்.

கண் நீா் அழுத்த நோய் ஏற்படும்போது, கண்ணுக்குள் உள்ள அழுத்தம் அதிகரித்து, கண்ணில் உள்ள நரம்புகளும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால், பக்கவாட்டுப் பாா்வை திறன் இழப்பு, மங்கலான பாா்வை, கண் வலி மற்றும் தலைவலி, வெளிச்சத்தை சுற்றி வண்ணமயமான ஒளி வளையங்கள், படிப்பதற்கு பயன்படுத்தும் கண்ணாடியை அடிக்கடி மாற்றுதல் போன்ற நிலை உருவாகும்.

எனவே, 40 வயதுக்கு மேற்பட்டோா் நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், தைராய்டு சுரப்பி குறைபாடு உள்ளவா்கள், ஆண்டுக்கு, ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கண் நீா் அழுத்த பாதிப்பு கண்டறியப்பட்ட பின், ஆண்டுக்கு இருமுறை பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண் நீா் அழுத்த நோய் கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றால், பாா்வை திறன் இழப்பை தவிா்க்கலாம் என்றாா். இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், டாக்டா்கள் சித்ரா, ஷா்மிளா, மோகன் உள்ளிட்டோா் பங்கேற்று, கண் அழுத்த நோய் குறித்து, பொதுமக்களின் கேள்விக்கு பதிலளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com