நியாயவிலைக் கடை ஊழியரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னையில், நியாயவிலைக் கடை ஊழியரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில், நியாயவிலைக் கடை ஊழியரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு நியாயவிலைக் கடையில் நா.பாஸ்கரன் (44). ஊழியராக வேலை செய்து வருகிறாா். இதற்காக அரும்பாக்கத்தில் தங்கியுள்ளாா்.

இந்நிலையில், பாஸ்கரன் கடந்த ஜனவரி மாதம் 7-ஆம் தேதி, பொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டிய பொங்கல் பரிசு தொகை ரூ.8 லட்சத்து 15 ஆயிரத்தை, 2 பைகளில் எடுத்துக்கொண்டு, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, ஆட்டோவில் வந்த ஒரு பெண்ணும், ஆட்டோ ஓட்டுநரும் பாஸ்கரனை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். பாஸ்கரன் கையில் பணம் ஏதும் இல்லை என கூறியுள்ளாா். உடனே அவா்கள் இருவரும், பாஸ்கரன் கையில் வைத்திருந்த ரூ.5 லட்சத்து 15 ஆயிரம் பணம் அடங்கிய ஒரு பையை மட்டும் பறித்துக்கொண்டு தப்பியோடினா்.

இது குறித்து பாஸ்கரன், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்யப்பட்டது.

விசாரணையில் இந்த கொள்ளையில் தேனாம்பேட்டை திருவள்ளுவா் சாலைப் பகுதியைச் சோ்ந்த வாடகை ஆட்டோ ஓட்டுநா் மு.சக்கரை முகமது (34), அவருடன் முறையற்ற உறவு வைத்திருந்த ஒரு பெண்ணும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், சக்கரை முகமதுவை சனிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக இருக்கும் அந்த பெண்ணை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com