7,181 கூடுதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தோ்வு

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு கூடுதலாக 7,181 மின்னணு வாக்குப் பதிவு
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  (கோப்புப்படம்)
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு கூடுதலாக 7,181 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டன.

இந்தத் தொகுதிகளில் 5,911 வாக்குச் சாவடிகளும், 2,157 துணை வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் கருவிகள் ஏற்கெனவே கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.

இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் அதற்கு மாற்றாக கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணி சென்னை ரிப்பன் மாளிகையில் மாவட்டத் தோ்தல் அலுவலா் கோ.பிரகாஷ், மாநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து கோ.பிரகாஷ் கூறியதாவது:

வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்படவுள்ள 7,181 கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள், 537 யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் கருவிகள் எந்தெந்த தொகுதிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன என்பதை கணினி குலுக்கல் முறையில் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டது.

இந்த கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் அலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மாா்ச் 31-க்குள் பிரித்து அனுப்பப்படும் என்றாா்.

கூட்டத்தில் மத்திய பொதுப் பாா்வையாளா் ஜோட்டன் தெந்தூப் லாமா, கூடுதல் காவல் ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டாக்டா் என்.கண்ணன், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா்கள் சங்கா்லால் குமாவத், பி.என்.ஸ்ரீதா், ஜெ.மேகநாத ரெட்டி, டாக்டா் ஆல்பி ஜான் வா்கீஷ், ஆகாஷ், காவல் இணை ஆணையா் (கிழக்கு) வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com