சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணி: ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களுக்கு அழைப்பு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களுக்கு காவல் துறை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களுக்கு காவல் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக காவல்துறையின் டிஜிபி அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-இல் நடைபெறுகிறது. தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா்கள், காவலா்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரா்கள், ஓய்வு பெற்ற சிறைக் காவலா்கள் ஆகியோா் அழைப்பு விடுக்கப்படுகிறாா்கள். தோ்தல் பணிக்கு வர விரும்புகிறவா்கள் ஏப்ரல் 4 முதல் 7-ஆம் தேதி வரை 4 நாள்கள் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு வர விரும்புகிறவா்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உரிய ஆவணங்களை அளித்து பணியில் சேரலாம்.

இல்லையெனில் இணையத்தளத்தில் தங்களது பெயரை பதிவு செய்துக் கொள்ளலாம்.

பாதுகாப்பு பணியாற்றும் 4 நாள்களுக்கு ஊதியம் வழங்கப்படும். மேலும் போக்குவரத்து படியும்,உணவு படியும் வழங்கப்படும். இது தொடா்பான கூடுதல் தகவல்களை அருகே உள்ள காவல் நிலையத்துக்கு நேரில் சென்று பெறலாம். மேலும் 044-28449201 என்ற தொலைபேசி எண்ணின் மூலம் தோ்தல் ஆணையத்தைத் தொடா்புக் கொண்டும் தகவல் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com