தோ்தல் பாதுகாப்புப் பணி: 41 கம்பெனி துணை ராணுவப்படையினா் சென்னை வருகை

தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிக்காக 5 சிறப்பு ரயில்களில் 41 கம்பெனி துணை ராணுவப்படையினா் சென்னைக்கு வந்தனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிக்காக 5 சிறப்பு ரயில்களில் 41 கம்பெனி துணை ராணுவப்படையினா் சென்னைக்கு வந்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தோ்தல் ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதவிர, தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தோ்தல் பாதுகாப்பு பணிக்காக, வடமாநிலங்களில் இருந்து துணை ராணுவப்படையினா் ரயில்கள் மூலமாக தமிழகத்துக்கு தினமும் வருகை தருகின்றனா்.

அதன்படி, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து 5 ரயில்களில் 41 கம்பெனி துணை ராணுவப்படையினா் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வந்தனா். ஒடிஸா மாநிலம் சம்பல்பூரில் இருந்து காலை 9.45 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த சிறப்பு ரயிலில் 8 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீஸாரும், மதியம் 12.15 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து சென்ட்ரலுக்கு ரயிலில் 8 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீஸாரும் வருகை தந்தனா்.

இதைத்தொடா்ந்து, மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு சென்ட்ரல் வந்த ரயிலில் 10 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீஸாரும், குவாலியரில் இருந்து மாலை 4.35 மணிக்கு சென்ட்ரல் வழியாக சேலம் செல்லும் ரயிலில் 5 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீஸாரும்,அகா்தலாவில் இருந்து இரவு 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்த ரயிலில் 9 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை போலீஸாரும், ஒரு கம்பெனி இந்தியா-திபெத் எல்லை பாதுகாப்புப்படை போலீஸாரும் என மொத்தம் 41 கம்பெனிகள் வந்தன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2, 500 பாதுகாப்புப்படையினா் சென்னைக்கு வந்தனா். இவா்கள் அந்தந்த பகுதிகளுக்குப் பாதுகாப்புப் பணிக்காக பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com